நீங்க குறிப்பிடும் order போட்டு சாப்பாடு வாங்குவது அம்மா வீட்டில் இருந்து உணவு வரவழைப்பது கணவன் சமையல் இதர வீட்டு வேலை செய்வது எல்லாம் பக்கத்து தெருவுல ஒரே ஊரில் திருமணம் செய்பவர்களுக்கு கூட கொஞ்சமே கொஞ்சம் பொருந்த வாய்ப்பு உள்ளது என் ஊரில் எல்லாம் இந்த வீட்டுக்கு வந்து உணவு டெலிவரி இல்லைங்க

அதே போல மாவட்டம் விட்டு மாவட்டம் கூட திருமணம் செய்து கொடுப்பாங்க ஏன் வெளிமாநிலத்துக்கும் திருமணம் செய்து அனுப்பி வைப்பாங்க அப்போ இந்த அம்மா வீட்ல உணவு வாய்ப்பு இல்லைங்க..
இன்னும் தமிழ்நாட்டின் பெண் மெட்ரோ பைலட், பெண் பஸ் ஓட்டுனர் இதெல்லாம் தினசரி பத்திரிகைல பாக்கும் போது பெண்கள் இப்போதான் முதல் அடி எடுத்து வைக்கிறது போல தான் எனக்கு தோணுது.நீங்க அந்த பத்து பேர் பாத்து மகிழ்ச்சியில சொல்லும் போது எனக்கு மீதம் இருக்கும் பெண்கள் என்ன பண்றாங்க தோணுது.
இந்த சகிப்புத்தன்மை விட்டு கொடுத்து போறது இதெல்லாம் எதுக்கு நம்ம எதிர்ல இருக்கவங்க சரியா முறையா இருக்கும் போது அங்கு சகிப்புத்தன்மை அவசியம் இல்லைல.. எட்டு மணி நேர அலுவலகத்தில் கூட ஏதேனும் பிரச்சினைனா நாம சொல்றது இதெல்லாம் சகிச்சுகிட்டு இங்க அவசியம் இல்லைனு வேலை விட்டு போற நபர்கள் இருக்கும் உலகம் இது அப்படி இருக்கும் போது அதிக நேரம் செலவிடும் நாம் வாழும் வீட்டில் இந்த சகிப்புத்தன்மை ஏன்????? எல்லாமே சரியா இருக்கும் இடத்தில் சகிப்புத்தன்மை விட்டு கொடுத்து போறது அனுசரித்து நடந்துக்கிறது இதெல்லாம் தேவைப்படாது...அனுபவிச்சு வாழனும்ங்க வாழ்க்கையை சந்தோஷமா அதைவிட்டு பெண்கள்னா அனுசரித்து போகணும் default dialogue ஆகிட்டு நம்ம மக்கள் கிட்ட...
இந்த சகிப்புத்தன்மை அனுசரித்து போறது விட்டு கொடுத்து போறது இதெல்லாம் பெண்ணுக்கு மட்டுமே எழுதி வச்சு இருக்கா??? இதெல்லாம் இருக்க வேண்டும் தான் ஆனால் இதுவே வாழ்க்கை முழுவதும் இருக்க கூடாது.. நல்லா இருக்கும் நாலு பேர் பாத்து மகிழ்ச்சியில பேசுறது விட இன்னும் மாற்றம் காணாத இளம் பெண்கள் வாழ்க்கையை கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நல்லா இருக்கும்.... இன்னும் திருமணம் ஆன புதுப்பெண் மரணம் மாப்பிள்ளை வீட்டார் கைது செய்தி எல்லாமே வந்துட்டு தான் இருக்கு..
நான் படிக்கிறது இந்த உலகத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் தான் சகோதரி....
அம்மா வீட்டு உணவுன்னு நான் சொன்னது வாய்ப்பு இருக்கிறவர்களுக்கு அது நடைமுறை மாதிரி ஆகிட்டுது என்று சொன்னேன். மற்றபடி எங்கிருந்தாலும் எத்தனையோ விதத்தில் உணவை ஆர்டர்/பார்சல் வாங்கி விடுகிறார்கள்தானே?

ஆர்டர் வாய்ப்பு இல்லாவிட்டாலும் ஹோட்டல் இல்லாத ஊர் இல்லையே, அங்கே பார்சல் கட்டுவாங்க
பெண் பைலட், மெட்ரோ ஓட்டுனர், பஸ் ஓட்டுனர் எல்லாம் பத்திரிகையில் பார்க்கும்போது பெண்கள் இப்போதான் முதல் அடி எடுத்து வைக்கிறதுபோல இருக்குன்னு சொல்லியிருக்கீங்க.
ஆச்சர்யமா இருக்கு. ஏன்னா, தமிழ்நாட்டில் முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுனர் வந்தே 32 வருடங்கள் ஆகிறது. மெட்ரோ ரயில் ஓட்டுனர் கூட வந்து 10 வருடங்கள் ஆகிட்டுது. ஆனாலும் பெண் ஓட்டுனர்கள், பைலட்டுகள் சிறிய அளவில் இருந்தாலும், அந்த துறையிலும் பெண்கள் சாதித்து வருகிறார்கள். பேருந்தில் பெண் நடத்துனர்கள் இப்போது அதிகரித்துவிட்டார்கள். இப்போ நாம் புள்ளி விவரக் கணக்குக்கு போகவில்லை என்றாலும், நீங்கள் சொல்வது போல, இது ஒரு பத்து பேர் சொல்கிற அளவு விட பல பல மடங்கு அதிகம். இன்றைய பெண்கள் அனைத்து துறையிலும் முன்னேறி இருக்காங்கன்னு தான் நான் சொல்கிறேன். நீங்க சொல்கிற கிராமத்து பெண்கள் உட்பட. ஏன் அங்கே நூறு நாட்கள் வேலை திட்டம், சுய உதவிக் குழு இதெல்லாம் படிக்காத பெண்கள் கூட முன்னேறுவதற்கு உதவ வில்லையா? அப்புறம் முக்கியமான ஒன்று
நாங்கள் எப்போதும் பெண் மட்டுமே சகித்துபோக வேண்டும், விட்டுக்கொடுத்து போக வேண்டும் என்று சொன்னதே இல்லை. 8 மணி நேர அலுவலகத்தில் பிரச்சனை என்றால் விட்டுவிட்டு வேறு வேலை தேடுவதுபோல், அவ்வளவு எளிதாக மாப்பிள்ளையை சகிக்க முடியவில்லை என்று பெண்களால் வெளியேற முடியுமா?

அல்லது அடிக்கடி வேலையை மாற்றுவதுபோல் மாப்பிள்ளையும் மாற்ற முடியுமா?

கல்யாணம் ஆகி விட்டால் மாப்பிள்ளை, அவர் குடும்பத்தை தங்களுடையதாக நினைத்தால் சிறு சிறு பிரச்சனைக்காவது விட்டுக்கொடுக்க மாட்டார்களா? (பெரிய பிரச்சனை, டிவோர்ஸ் வரை போவதை இங்கே கொண்டுவரலை, அதன் பாதை எங்கோ போகும்)
வாழ்க்கையில் அனுசரித்து வாழாமல், அனுபவித்து வாழனும்னு சொல்றீங்க. ஊசி இடம் கொடாமல் நூல் நுழைய முடியுமா? கொஞ்சம் கூட அனுசரிக்க மாட்டேன் என்பவர்கள் திருமணத்திற்கு தகுதி இல்லாதவர்கள். உண்மையில் பெண்கள் தாங்க நிறைய அனுபவிக்கிறோம். வித விதமான உடைகள், நகைகள், அழகு சாதனங்கள், கூந்தல் அலங்காரங்கள், இன்னும் எத்தனை, எத்தனையோ. ஆனாலும் இருப்பதை விட அதிகத்தில் ஆசை படுவதால் தான் பிரச்சனைகள் வருது.
மாற்றம் காணாத இளம் பெண்கள் என்று யாரை சொல்றீங்கன்னு தெரியலை. மாற்றம் ஒன்றே மாறாததுன்னு நம்புகிறோம் தானே. அதன் படி இன்றைய பெண்கள் அனைத்து வகையிலும் நிறையவே மாறிதான் இருக்கிறார்கள் என்பது என் கருத்து.
நம் தாய், தந்தை, கூடப்பிறந்த சகோதர சகோதரிகள், நமக்கு பிறக்கும் குழந்தைகள் அனைவரும் நமது பிறப்பால் இறைவனால் கொடுக்கப்பட்டவர்கள். கணவன்/மனைவி மட்டுமே நம்மால் தேர்ந்து எடுக்க முடியும். அப்படி நாமே தேர்ந்தெடுத்துவிட்டு குற்றம், குறை இருந்தால் இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்து, விட்டுக்கொடுத்து போவதில் தவறில்லை. இப்போதும் பெண் மட்டுமே இதை செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. உண்மையான, தூய்மையான அன்பும், நேசமும் இருக்கும் இடத்தில் நானா, நீயா வர வாய்ப்பில்லை.