என்னதான் மாமாவை குறை கூறினாலும் தவறு செய்யும் பொழுது வாயை மூடிக் கொண்டு வாழ்ந்து விட்டு இப்பொழுது காலம் சென்ற பின் அதுவும் மகள் எதிரே வந்து கேள்விகளுடன் நிற்கும் பொழுது வருந்தி கூறுவதால் எந்த பயனும் இல்லை. உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். பாலகுமாரனும் வருந்தியே தீர வேண்டும். ஜானகி என்னதான் இப்பொழுது குதித்தாலும் அவர் செய்வது அத்தனையும் ஒரு விதமான இன் செக்யூரிட்டி தான். அவரை இந்த அளவிற்கு வளர்த்து விட்டது அவரின் குடும்பத்தினரே. தந்தையாக சக்திவேல் அவர் பிடிவாதத்திற்கு துணை போய் தமையனும் மற்றவரும் அவருக்கே எப்போதும் அடங்கி இருந்ததாலும் இனி அவர் மாறுவதோ அவரை குறை கூறுவதோ ஒன்றும் பயனில்லை. வஞ்சி கூறியது போல் அவரவர் வாழ்க்கையை அவர்களுடைய சௌக்கியத்தை தானாக அமைத்துக் கொள்ள வேண்டும்.