காதல் என்றும் காதல் தானோ?

என்றோ மனதுக்குள் புதைந்த காதல், அவன் மட்டுமே தனக்குத் துணை என்று தெரிந்தபின் அவளையும் மீறி வெளிவந்து அவனை ஏற்றுக் கொண்டாளே?
மிதுனின் மீது தமக்கை என்ற பாசத்தை வெளிப்படுத்தி விட்டாள். கெஸ்ட் ரோலில் துவாரகி, ஏகனை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நிதாமா.

கீர்த்தியையும் அண்ணியாக நெருங்கி விட்டாள்.

மாமியார் ஏற்கனவே நெருக்கம்தான். மாமனாரும் நல்ல விதம்.
முக்கியமான மூன்று விக்கட்டுகளை எப்படி வீழ்த்தப்போகிறாள்? இந்த பாலகுமாரனுக்கு இப்போ அப்படி என்ன அவசரம்? அவள் சொத்தை குடுத்த வேகத்தில் அவளை சொந்தம் கொண்டாடனுமா. இவரு பேசணும்னு சொன்னதுக்கே கணவன் மனைவி பிரிஞ்சு நிற்காங்க, இதுல இவரு பேசிட்டா என்ன ஆகுமோ?

ஏண்டா நிலன் உன்னை அவ மனசார ஏத்துக்கிட்டான்னு தெரியாதா? இந்த ஒரு வாரம் அவ கூட கும்மி அடிச்சிட்டு, இப்போ கோபத்தில் ஒரு கேள்வி கேட்டா நீ அவளை விட்டுட்டு ஓடிப் போயிடுவியா?
அவ மனக்காயம் எப்படிபட்டதுன்னு தெரிஞ்சும் அவ உன் மாமன்கிட்ட உடனே பேசணும்னு நீ பிடிவாதம் பிடிச்சிட்டு, இப்போ நீ கோவிப்பியா?
ஒழுங்கு மரியாதையா அவ கால்ல ஓடி வந்து விழுந்துறு. ஏதோ போனாப் போகுதுன்னு இப்போதான் ரைட்டர் மனம் இறங்கி உனக்கு ரொமான்ஸ் பண்ண டைம் கொடுத்தாங்க.

அப்புறம் ரொமான்ஸ்ஸ கட்பண்ணிட்டு டைரக்ட்டா உன் கையில முதல் ஆர்டரை மட்டும் கொடுத்துவாங்க.

அப்புறம் அடுத்த ஆர்டருக்குத்தான் உனக்கு ரொமான்ஸ் வைப்பாங்க



