• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே போட்டியின் வெற்றியாளர்கள் இதோ

நிதனிபிரபு

Administrator
Staff member
அழகென்ற சொல்லுக்கு அவளே போட்டியின் வெற்றியாளர்கள் இதோ:

அதற்கு முதலில் கதையின் தொடக்கம் முதல் கடைசி வரையில் என்னோடு பயணித்து, உங்கள் கருத்துகளினாலும், லைக்குகளினாலும், சின்ன சின்னக் கேலிகளாலும் என்னை உற்சாகப்படுத்திய அத்தனை வாசக உறவுகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

குலுக்கல் முறையில் வெற்றியாளர்களைத் தெரிவு செய்தாயிற்று. என் மகள் சிந்துதான் ஐவரையும் எடுத்தார். அதில் சுஜி என்பவர் என் நண்பி. அதனால் அவரைப் போட்டியிலிருந்து விலக்குகிறேன்.

இதை முதலே செய்யக்கூடாதா என்று கேட்காதீர்கள். தவறு என் பெயரில்தான். அவர் இந்தப் பெயரில் தளத்தில் இருப்பது எனக்குத் தெரியாது.

அவருக்குப் பதிலாக இன்னொருவரைத் தெரிவு செய்திருக்கிறேன். அதுதான் வீடியோவில் கடைசியாக இருக்கும் வாசகி.

இதோ வெற்றியாளர்கள் பெயர்கள். வெற்றியடைந்த உங்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த பாராட்டுகள்.


  1. @Nithya Dinesh
  2. @KAMATSHI NARENDRAN
  3. @Sowdharani
  4. @Sasi Dhurvas
  5. @Mathithilak


வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்ட வீடியோவை இங்கே பதிவேற்ற முடியவில்லை. அதனால் Nithaniprabu Novels என்கிற என் Facebook Pageல் நீங்கள் பார்க்கலாம்.


இவர்களை விடவும் தளத்தில் மிகுந்த உற்சாகமாகவும், ஆக்கமான கருத்துகளையும், மற்றைய வாசகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் பங்காற்றிய மூவரை என் சொந்த விருப்பின் பெயரில் தெரிவு செய்திருக்கிறேன். (அதிகமாகத் தளத்தில் கருத்திட்டவர்கள் வரிசையில் இவர்களைத் தெரிவு செய்திருக்கிறேன்.)

அவர்கள்:


  1. @Goms
  2. @Ananthi.C
  3. @Sindhu Narayanan

இவர்களுக்கு அழகென்ற சொல்லுக்கு அவளே நாவல் புத்தகமாக வெளிவரும்போது அந்தப் புத்தகம் பரிசாக வழங்கப்படும்.

இனி ஒவ்வொரு முறையும் என் கதைகள் தொடராக வரும்போது இந்தப் போட்டி நடைபெற்று, பரிசுகள் வழங்கப்படும் உறவுகளே.

இப்போதும் சொல்கிறேன் தளத்தில் கருத்திட்டு, லைக்கிட்டு பயணிக்கும் வாசகர்கள்தான் இதற்கான தகுதியைப் பெறுவார்கள்.

இது முதல் போட்டி என்பதனால் குறைந்தபட்சமாக ஒரு லைக்காவது தளத்தில் இட்டிருக்க வேண்டும் என்கிற வரையறையின் கீழ் தெரிவு செய்தேன்.

அடுத்தமுறையிலிருந்து லைக் பண்ணி கருத்திடும் வாசகர்கள் மட்டுமே தெரிவுசெய்யப்படுவார்கள்.

அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

போட்டியில் பங்குபற்றிய, வெற்றிபெற்ற அத்தனை உறவுகளுக்கும் மீண்டும் ஒருமுறை இதயம் நிறைந்த நன்றிகள்.

பணப்பரிசு பெரும் வெற்றியாளர்கள் தளத்தின் பிரைவேட் மெசேஜில் உங்களின் gpay நம்பரை அனுப்பி வைக்கவும்.


புத்தகம் பரிசாகப் பெருகிறவர்களை அழகென்ற சொல்லுக்கு அவளே புத்தகமாக வெளிவரும்போது தொடர்புகொள்கிறேன்.

நட்புடன் நிதனிபிரபு
 
Last edited:
Top Bottom