• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Grenoble நகரத்தில் இருக்கும் La Bastille- யாழ் சத்யா - இதழ் 5

ரோசி கஜன்

Administrator
Staff member
வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

“போவோமா ஊர்கோலம்” பகுதியில் இன்று நான் உங்களை அழைத்துச் செல்லப் போவது பிரான்ஸ் நாட்டில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பிச் செல்லும் ஒரு இடத்துக்கு. அது என்ன இடம் என்று கேட்கிறீர்களா?

Grenoble நகரத்தில் இருக்கும் La Bastille எனும் இடத்திற்கு. அங்கே அப்படி என்ன விசேசம் இருக்கிறது என்கிறீர்களா? விசேசத்திலும் விசேசம் என்னவென்றால் அந்த இடத்துக்குப் போகும் வழி. அங்கே போவது téléphérique என்று பிரெஞ்ச்சில் அழைக்கப்படும் கேபிள் காரில்.

1543620783015.png


வேறு பல நாடுகளிலும் கேபிள் கார் இருக்கிறது தானே. பிறகு இதில் அப்படி என்ன விசேசம் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது மக்களே… அதற்கான காரணத்தையும் சொல்கிறேன் கேளுங்கள். இந்தக் கேபிள் கார் தான் நகரமயமாக்கப்பட்ட உலகின் முதலாவது கேபிள் கார். அப்போ விசேசம் தானே என்ன?

அத்தோடு இந்த La Bastille ஆனது மூன்று பள்ளத்தாக்குகளைக் குறுக் கறுத்துச் செல்லும் வீதியில் Grenoble நகரத்தின் இதயப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு சிறு மலைப் பகுதியாகும்.


1543620821744.png
Grenoble நகரத்தின் மையப் பகுதியில் இருந்து இந்த La Bastille இற்கு சில நிமிடங்களில் எங்களை அழைத்துச் செல்கிறது பெரிய பெரிய பபிள்ஸ் போல இருக்கும் இந்த கேபிள் கார். போவதற்கும் வருவதற்கும் தனி தனிக் கேபிள்களில் ஐந்து ஐந்து கோளங்களாய் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
1543620847511.png
நகரத்தின் மையத்தில் இருந்து பயணம் செய்ய ஆரம்பிக்கும் போது காணும் காட்சிகள் உண்மையிலேயே வியக்க வைக்கும். முழுதாய் கண்ணாடியால் ஆக்கப்பட்டிருப்ப தால் சுற்றி வர எல்லாப் பக்கங்களிலும் விரியும் காட்சிகள் அற்புதமாய் மனதுக்கு இதமளிக்கும்.

ஆரம்பத்தில் சர்சர் என கார்களும் பிற வாகனங்களும் போகும் வீதி; பின்னர் பரந்து விரிந்து, வளைந்து நெளிந்து ஓடும் ஆறு; ஆற்றங்கரை ஓரம் இருக்கும் உணவு விடுதிகள்; கொஞ்சம் கொஞ்சமாக உயரும் மலைப் பகுதியில் அமைந்தி ருக்கும் வீட்டுத்தொகுதிகள் என்று இறுதி முடிவு வரை இயற்கையையும் மனிதனின் வளர்ச்சியையும் புரிய வைக்கும் அழகுக் காட்சிகள் தான்.

மலையின் உச்சிக்குச் சென்று விட்டாலோ பிரான்ஸ் நாட்டின் மலைப்பகுதிகளில் இருக்கும் ஒரு பரவலான நகரத்தை நீங்கள் கண்டு ரசிக்கலாம்; கண்டு வியக்கலாம். அதுவும் சூரியன் மறையும் நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கதிரவன் தன்னை நகரப்பகுதியின் அடியில் சென்று ஒளித்துக் கொள்ளும் காட்சி “ஆஹா!” எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்படைய வைக்காது.

1934 ஆம் ஆண்டு Grenoble மேயராகவும் சுற்றுலாத்துறை வைஸ் பிரசிடென்டாகவும் இருந்த Paul Michoud என்பவரின் முயற்சியில் இந்தக் கார் வெற்றிகரமாக நிர்மாணிக்கப் பட்டது. ஆரம்பத்தில் சாதாரண பெட்டி உருவங்களாக அமைக்கப்பட்டவை 1976 ஆம் ஆண்டு கோளமாக, அதாவது பபிள்ஸ் போல மாற்றியமைக்கப்பட்டன.

1543620884530.png
2m விட்டத்தைக் கொண்ட இந்த உருண்டைகளில், ஒன்றில் ஆறு பேர் வரை அமரலாம். 260m உயரம் வரை 700m அளவு தூரம் இது பயணிக்கும். கிடையாக இல்லாமல் நகரத்திலிருந்து மலைக்கு உயரப் போவதாக இந்தப் பயணம் அமையும்.
மலையின் உச்சிக்குச் சென்றால் அங்கிருந்து கீழே பரந்து விரிந்து கிடக்கும் நகரத்தைக் காணும் காட்சிகளை விடவும் பல விளையாட்டுகள் கூட அங்கே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரை, அவரவர் வயதுக்கேற்ப பங்கு கொள்ளக் கூடியதாக மலையேறுதல், கேபிளில் சறுக்கிச் செல்லுதல், மலையில் இருந்து குதித்தல் போன்ற பல சாகச விளையாட்டுகளும் இவற்றில் அடக்கம்.

மூன்று உணவுச்சாலைகளும் ஞாப கார்த்தப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றும் கூட இங்குள்ளது. பல மக்கள் தங்கள் திருமண விழாவை இங்கு கொண்டாடுவதைக் கண்டிருக்கிறேன்.


1543620918616.png
பண்டைய கால மலைப்பகுதிப் படை வீரர்களின் வாழ்வைப் பிரதிப லிக்கும் வகையில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் புராதன பொருட்களையும், இன்றைய வீரர்கள் வரையான மாற்றங்களையும் விளக்கும் அருங்காட்சியகம் ஒன்றையும் கண்டு வியக்கலாம். பொதுவாகப் பெரிய வர்கள் போய் வர 8,20 யூரோ தான் டிக்கெட் விலை.
1543620935220.png
என் மகன் இந்தக் கேபிள்கார் பயணத்தில் ஆசை கொண்டதாலும், மலையுச்சியிலிருந்து பார்க்கும் காட்சியின் அழகில் நான் மனதைப் பறி கொடுத்ததாலும் ஒரு வருடத்திற்குரிய சீசன் எடுத்து வைத்து அடிக்கடி பயணிப்போம். இது வரை இருநூறு தடவைக்கு மேல் போய் வந்து இன்னமுமே சலிப்படையவில்லை என்றால் இது எத்தகைய அழகான இடம் என்பதை இலகுவாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த இடம் உங்களுக்குப் பிடித்ததா மக்கா? அடுத்த மாதம் வேறொரு இடத்தில் உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்.
 
Last edited by a moderator:

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom