ஜெர்மனியின் பிரங்க்ஃபுவர்ட் நகரம்! எப்போதும்போல, மிக மிக சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அங்கே, நகர்ப்புறத்தில் அமைந்திருந்த தன் வீட்டு பால்கனியில் கையை கட்டிக்கொண்டு நின்றிருந்தான் விக்ரம். செய்வதற்கு எத்தனையோ வேலைகள் இருந்தாலும் எதையும் பாராது அப்படியே நின்றிருந்தான். மனதில் உற்சாகமில்லை. உடலிலோ அது மருந்துக்கும் இல்லை. மகன் டெனிஷ் பள்ளிக்கூடம் சென்றிருந்தான்.
ஆபிஸ் போகவேண்டும் என்று மண்டைக்குள் மணியடித்தாலும் ‘அங்கே போயும் எதை செய்ய.. எப்பவும் பார்க்கிற அதே வேலைதானே..’ என்று சலிப்பாகவிருந்தது.
அவன் ஒன்றும் சோம்பேறி அல்ல! சொல்லப்போனால் மற்றவர்களை விடவும் போர்க்குணம் மிக்கவன்!
இலங்கைத் தமிழனுக்கு எல்லாமே போராட்டம் தானே! படிப்புக்கு போராட்டம், உழைப்புக்கு போராட்டம், பேசும் மொழிக்கு போராட்டம், வாழ ஒரு இடத்துக்கு போராட்டம், நிம்மதியான உறக்கத்துக்குக் கூட போராட்டம். இப்படி, போராடிப் போராடியே போராட்ட குணம் இரத்தத்தில் ஊறியது ஒவ்வொரு தமிழனுக்கும்!
அப்படித்தான் விக்ரமும்!
வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும்! மனைவியையும் மகனையும் நல்ல நிலையில் வாழ வைக்கவேண்டும் என்று எண்ணி, அல்லும்பகலும் போராடி உழைத்தான். ஒரு தொழிலாளியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்து, கைபேசிகளுக்கு பணமேற்றும் தொழிலை சுயமாக ஆரம்பித்து, அதை பெருக்கி இன்று நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறான். ‘டெனிஷ் மொபைல்’ என்றால் எல்லோருக்கும் தெரியும், தரமானதும் நியாயமானதும் என்று. அவனது வளர்ச்சி இன்று அவனையும் மீறியது.
ஆனால், அந்த அசுரத்தனமான போராட்டமும், ஓட்டமும் அவனது உயிர்நாடியையே அவனிடமிருந்து பிடுங்கிவிட்டிருந்தது!
உழைப்பு உழைப்பு என்று பணத்தை தேடி ஓடியவன், தன் காதல் மனைவி, மகனை கவனித்துக்கொண்டு அவனோடு பின்வருவாள் என்று நினைக்க, அவளோ அவன் தலையில் இடியையே இறக்கிவிட்டாள்.
ஒருநாள் நள்ளிரவில் வீடு வந்து உறங்கிக் கொண்டிருந்தவனை வந்து எழுப்பினாள் யாஸ்மின். அவன் மனைவி! ஜெர்மனிய பெண்.
“என்னம்மா.. கொஞ்சம் தூங்கவிடு.”
“கீழே உங்களை பார்க்க ஒருவன் வந்திருக்கிறான்.”
“என்னை பார்க்கவா? யாரது?” புருவங்களை சுருக்கினான். என்னதான் கடுமையான உழைப்பாளியாக இருந்தாலும், தொழிலை வீடு வரை கொண்டு வருகிறவன் அல்ல அவன்.
தெரிந்தவராக அல்லது சொந்தக்காரராக இருந்தால் அவள் அறியாத நபர் என்று அவனுக்கு யாருமில்லை. “யாரது உனக்கு தெரியாமல்?” என்று கேட்டுக்கொண்டே முகம் கழுவப் போக, அவளோ பதில் சொல்லாமல் கீழே இறங்கி ஓடினாள்.
‘இவள் என்ன ஒன்றுமே சொல்லாமல் போகிறாள்?’ எண்ணம் ஓட, முகத்தை கழுவிக்கொண்டு வந்து ஒரு சட்டையை எடுத்து மாட்டியபடி கீழே இறங்கினான்.
ஒரு ஜெர்மனியன். அவன் இதுநாள் வரை பார்த்ததே இல்லை. இவன் கீழே செல்லவும் எழுந்து கைகொடுத்தான் அவன். அவனை அமரும்படி இருக்கையை காட்டிவிட்டு தானும் அமர்ந்துகொண்டே மனைவியை கேள்வியாகப் பார்த்தான்.
அவளோ, இவனை பாராது மேசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை மீண்டும் அடுக்கிக்கொண்டிருந்தாள். முகத்தில் பதட்டம். கைகளில் நடுக்கம்.
“நாம் ஏற்கனவே சந்தித்து இருக்கிறோமா?” முன்னால் அமர்ந்திருந்தவனிடம் கேட்டான்.
“இல்லை. நான் யாஸ்மினின் தோழன்.” என்றான் அவன்.
‘தோழனா? இவள் ஏன் அதை சொல்லவில்லை?’ என்கிற யோசனையோடு மனைவியை பார்க்க, அவளோ இவன் கண்களை பாராது, “அவனை நான் காதலிக்கிறேன் விக்கி; உன்னை விவாகரத்து செய்துவிட்டு அவனை மணந்துகொள்ள போகிறேன்.” என்றாள்.
அதிர்ந்துபோய் மனைவியை பார்த்தான் விக்கி. சித்தம் கலங்குவது போலிருந்தது. பேச்சு மறக்க, மூச்சு அடங்க மனைவி சொன்னதை நம்ப முடியாமல் அவளை பார்த்தான்.
அவனுடைய காதல் மனைவி யாஸ்மின். அவள் இன்னொருவனை காதலிக்கிறாளா? பள்ளிப்பருவத்தில் தொடங்கி நல்ல நண்பர்களாக இருந்து, அவன் எடுத்த பாடத்தையே அவளும் எடுத்து அவன் சேர்ந்த கல்லூரிக்கே சேர்ந்து, அவனுடைய வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான கட்டங்களிலும் கூட இருந்து, தாயும் தந்தையும் விபத்தில் இறந்தபோது அன்னையாக இருந்து அவனை காத்தவள் இன்னொருவனை காதலிக்கிறாளா?
அவனுக்கும் அவளுக்கும் எப்போது காதல் மலர்ந்தது என்று கேட்டால் அவனுக்கும் தெரியாது. அவளுக்கும் தெரியாது. ஒருவருக்கொருவர் நேசத்தை பரிமாறிக்கொண்டார்களா என்று கேட்டால் அதுவும் இல்லை. ஒருவரை ஒருவர் மனதால் புரிந்துகொண்ட, தெரிந்து கொண்ட பந்தம் அவர்களது! அந்தளவு புரிந்துணர்வோடு வாழ்ந்தவர்களின் வாழ்வில் இயல்பாக பற்றிக்கொண்ட நேசம், திருமணம் என்கிற புனிதமான பந்தத்தை பூண்ட இத்தனை நாட்களில் கடிந்தொரு சொல் அவளை அவன் சொல்லியிருக்க மாட்டான்.
அப்படி அவன் சொல்லும்படி அவள் நடந்ததில்லை. அந்தளவுக்கு அவனை புரிந்துகொண்டு வாழ்ந்தவள் இன்னொருவனை தேடியோட என்ன காரணம்?
அதிர்ச்சி மெல்ல மெல்ல அடங்க அந்த இடத்தை கண்மண் தெரியாத கோபம் ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
அந்த நேரம், “மிஸ்டர் விக்ரம்..” என்று அந்த அவன் ஆரம்பிக்க, கையை நீட்டி தடுத்தவனின் முகம் பாறையைபோல் இறுகிக்கிடந்தது.
ஆத்திரத்தை அடக்க நினைத்தவனின் கழுத்தோர நரம்புகள் புடைக்க, கண்கள் சிவக்க கை முஷ்டிகள் இறுகின. கலவரமாக தங்களுக்குள் பார்வையை பரிமாறிக் கொண்டனர் அந்த இருவரும்.
அந்தநொடியில் நொடிந்து போனது விக்ரமின் உள்ளம்! பிரத்யேகமான பார்வை பரிமாற்றங்களும், பரிபாஷைகளும் மனைவி என்கிறவள் கணவனோடு அல்லவோ நடத்த வேண்டும்!
இங்கே அவளுக்கு யார் கணவன்? மிக கேவலமாக உணர்ந்தான் தன் நிலையை!
“விக்கி.. நான் சொல்வதை கொஞ்சம்..” என்று ஆரம்பித்த யாஸ்மினை விக்ரமின் பொசுக்கும் பார்வை அடக்கியது.
அவனின் பக்கமாக திரும்பி, “நீ போகலாம்!” என்றான் விக்ரம்.

Last edited: