• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தனிமைத் துயர் தீராதோ - 53

Ananthi.C

Well-known member
அழாம.... தொண்டை அடைக்காம....படிக்கவே முடியல.... ஒவ்வொரு பதிவும் மனதை அத்தனை ஆழமாக தாக்கியது....
மித்ரா... எவ்வளவு அற்புதமான தேவதை..... தன்னைத்தானே செதுக்கி கொண்ட கல்கி....
கீதன்... மித்ராவின் மீதான காதலும்...சத்தி வித்தியிடம் கொண்ட அன்பும் என அந்த மூவருக்கும் கிடைத்த வரம் அவன்....
சத்தி...அக்கா மாமா காட்டிய அன்பை.. பாசத்தை பன்மடங்காக திருப்பி காட்டும் பாசக்காரன்....
பவி..அவள் அம்மா அக்காவை போல் சுயநலமாக இல்லாமல்.... அனைவரின் மகிழ்ச்சியையும் பெரிதென நினைத்த அவளும் ஒரு தேலதையே...

மனதின் ஆழத்தில் விழுகின்ற அன்பின் விதை விருட்சமாகி தன் அன்பிற்க்குரியவர்களை குறை நிறையோடு ஏற்று வாழவைக்கும் அன்றி...அழிவை தராது என்பதற்கு கீதன் மித்து காதலே சாட்சி...

😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
அழுது அழுது வாசித்தாலும் கடைசியாக ஆனந்தக் கண்ணீராக வரவைத்த உங்கள் திறமைக்கு நிகரேது?
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற மாதிரி
அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ் என்று நிரூபித்து விட்டீர்கள்.
மிகவும் மனதை நெகிழ வைத்த உருக்கமான கதை. மிக்க நன்றி.

உங்கள் எழுத்து பணி மேலும் சிறக்க நல்வாழ்த்துகள்.
 
மித்ரா, கீதன், சத்யன், பவி.. நால்வரும் அன்பை மட்டுமே ஜீவாதாரமாக கொண்டு வாழும் தூய ஆத்மாக்கள்... அருமையான கதை, அழகான நிறைவு 💐💐💐💐💐❤
 

peijar

New member
Arumaiyana kadhai. Azhudhu konde padithen. Mithra, Geethan, Sathyan, Pavi, Vidya ellarume arumaiyana characters.romba rasiichu padichen. Thank you sis
 

Goms

Well-known member
உண்மையில் ஒரு பெண் மித்ரா நிலையில் இருந்தால் என்னவாகி இருப்பாளோ, ஆனால் அவள் உங்கள் கைகளில் இருந்ததால் அவளை நன்றாக செதுக்கி அழகாக்கி விட்டீர்கள். இதை படிக்கிற பெண்கள் தங்கள் துன்பங்களிலிருந்து வெளி வர தன்னம்பிக்கையும், தைரியமும் நிச்சயம் வரும்.

சத்தி, வித்தி, மித்ரா, கீதன் பிணைப்பு சொல்லில் வடிக்க முடியாது. இவர்களுடைய பாசத்தை விட, கடைசியில் வந்தாலும் எங்கள் ஒருமித்த கருத்தை, மனதை, கொள்ளை கொண்டு வென்ற பெண் பவி.
 

kumutha valli

New member
Super. எத்தனை தடவை அழுது கொண்டே படித்தாலும் திரும்ப திரும்ப படிக்க வேண்டும் என்று ஆசை வரும்
 

Akila

New member
Nitha ma, unga heroine ellam mass. Ana indha Mithra, really an angel. Manasila romba naal irukkum indha kathai. Super!
 
Top Bottom