• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஏழையின் சிரிப்பில்...

நிதனிபிரபு

Administrator
Staff member
ஏழையின் சிரிப்பில்....

1546684892755.png

உண்ண உணவில்லை
உடுக்க உடையுமில்லை
படுக்க இடமுமில்லை
காசுமில்லை காணிநிலமுமில்லை
கள்ளமில்லா ஏழையின் சிரிப்பினில்
நேசம் மட்டும் நிறைந்து கிடக்கிறது!

இது உங்கள் பக்கம்! வாசகராகிய உங்களுக்கே உரித்தான பக்கம்! கதைகளை படிப்பதும் கருத்துக்களை சொல்வதுமாக மட்டுமே பொழுதை ஏன் கழிப்பான்? என்றோ ஓர் கவிதை அல்லது கதை வாசித்துக்கொண்டு போகையில் இது இப்படி இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று உங்கள் உள்ளம் சொல்லியிருக்கும்! என்னடா இதை இப்படி எழுதி இருக்கிறார்களே என்று மனம் முரண்டியிருக்கும். அந்தச் சிந்தனையை வெளிக்கொணரும் அழகிய முயற்சிதான் இது!

எழுத்தாளன் எழுத்தாளனாகவே வெளிவந்ததில்லை. வாசகனாய் ஆரம்பித்து, கருத்தாளனாய் மாறி, கற்பனையாளனாய் சிந்தித்தே எழுத்தாளனாய் முதல் அடியை எடுத்து வைக்கிறான்!

நீங்களும் வாருங்கள்! முதல் காலடிதான் சற்றே சிரமமானது! வைத்துவிட்டீர்களோ விறுவிறு என்று நடைபோடத் தொடங்கிவிடுவீர்கள்!

வாருங்கள்; கவிதை எழுதிப் பழகுவோம்! மேலே நானும் ஏதோ கிறுக்கி இருக்கிறேன். நீங்களும் கிறுக்குங்கள்! அத்தனை கிறுக்கல்களும் அழகிய கோலமாய் மாறட்டும்!

செந்தூரத்தின் வாசக நெஞ்சங்களே, நீங்கள்தான் வரவேண்டும். "ஏழையின் சிரிப்பில்..." என்கிற தலைப்பில் இந்தப் படத்தைப் பார்க்கையில் உங்கள் உள்ளம் என்ன சொல்கிறது? அதை வார்த்தைகளாக வடியுங்கள்! கவிதையாக வருகிறதா இல்லையா என்பதல்ல முக்கியம். என்ன உணர்கிறோம்.. அதை எப்படி வார்த்தைகளில் கொண்டு வருகிறோம் என்பதுதானே முக்கியம்!

இது ஓர் வார்த்தைப்போர்! வாருங்கள், போராடலாம்

Last edited:

Mohanan

New member
நாங்கள் ஏழைகள்
FB_IMG_1541678458560.jpg
தண்ணீரில் புழுவொன்று வழியின்றி
தத்தளித்துத் துடிப்பதைப் போல்
கண்ணீரில் நாமின்று உணவின்றி
கவலையாய்த் தவித்திருந்து மிதக்கின்றோம்.

பசித்தாலும் உணவின்றி வாழ்விலே
பட்டினியை உட்கொண்டு வாழ்கிறோம்
புசித்தாலும் வறுமையன்றி எமக்கு
புதிதாக உணவின்றி சாகின்றோம்.

காலங்கள் மாறியே போனாலும்
காயங்கள் எம்மில் மாறாது
ஞாலத்தில் செல்வம் குவிந்தாலும்-எங்கள்
ஞாபகம் என்றுமே தீராது.

கந்தையை மட்டுமே உடையாக
கடைசி வரைக்கும் உடுக்கின்றோம்
எந்தையே ஈசனே என்செய
ஏதிலியாய் தினமும் அலைகின்றோம்.
 
நிதனிபிரபு

Administrator
Staff member
நாங்கள் ஏழைகள்
View attachment 268
தண்ணீரில் புழுவொன்று வழியின்றி
தத்தளித்துத் துடிப்பதைப் போல்
கண்ணீரில் நாமின்று உணவின்றி
கவலையாய்த் தவித்திருந்து மிதக்கின்றோம்.

பசித்தாலும் உணவின்றி வாழ்விலே
பட்டினியை உட்கொண்டு வாழ்கிறோம்
புசித்தாலும் வறுமையன்றி எமக்கு
புதிதாக உணவின்றி சாகின்றோம்.

காலங்கள் மாறியே போனாலும்
காயங்கள் எம்மில் மாறாது
ஞாலத்தில் செல்வம் குவிந்தாலும்-எங்கள்
ஞாபகம் என்றுமே தீராது.

கந்தையை மட்டுமே உடையாக
கடைசி வரைக்கும் உடுக்கின்றோம்
எந்தையே ஈசனே என்செய
ஏதிலியாய் தினமும் அலைகின்றோம்.

அருமை தம்பி! வலியை அப்படியே சொல்லும் மிக அழகான வார்த்தைகள்! நெஞ்சு கனத்துத்தான் போகிறது!
 
Rena

Active member
பணம் இருந்தும் சிலர்
எழை தான் இங்கே
கொடுக்கும் மனமும் இல்லை
சிரிக்கும் அறிவும் இல்லை
பெரும் பேறு பெற்றவர் தாம்
என்ற எண்ணம் வேறு
மற்றவரை மகிழ
நாம் மகிழ
வேண்டும்
எனத் தெரியாத யாரும் எழைகளே
அடுத்தவர் மகிழ்ச்சி கண்டால்
மகிழ தெரியாத யாரும் எழைகளே..
 
Rena

Active member
ஏழையின் சிரிப்பில்....

View attachment 266

உண்ண உணவில்லை
உடுக்க உடையுமில்லை
படுக்க இடமுமில்லை
காசுமில்லை காணிநிலமுமில்லை
கள்ளமில்லா ஏழையின் சிரிப்பினில்
நேசம் மட்டும் நிறைந்து கிடக்கிறது!

இது உங்கள் பக்கம்! வாசகராகிய உங்களுக்கே உரித்தான பக்கம்! கதைகளை படிப்பதும் கருத்துக்களை சொல்வதுமாக மட்டுமே பொழுதை ஏன் கழிப்பான்? என்றோ ஓர் கவிதை அல்லது கதை வாசித்துக்கொண்டு போகையில் இது இப்படி இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று உங்கள் உள்ளம் சொல்லியிருக்கும்! என்னடா இதை இப்படி எழுதி இருக்கிறார்களே என்று மனம் முரண்டியிருக்கும். அந்தச் சிந்தனையை வெளிக்கொணரும் அழகிய முயற்சிதான் இது!

எழுத்தாளன் எழுத்தாளனாகவே வெளிவந்ததில்லை. வாசகனாய் ஆரம்பித்து, கருத்தாளனாய் மாறி, கற்பனையாளனாய் சிந்தித்தே எழுத்தாளனாய் முதல் அடியை எடுத்து வைக்கிறான்!

நீங்களும் வாருங்கள்! முதல் காலடிதான் சற்றே சிரமமானது! வைத்துவிட்டீர்களோ விறுவிறு என்று நடைபோடத் தொடங்கிவிடுவீர்கள்!

வாருங்கள்; கவிதை எழுதிப் பழகுவோம்! மேலே நானும் ஏதோ கிறுக்கி இருக்கிறேன். நீங்களும் கிறுக்குங்கள்! அத்தனை கிறுக்கல்களும் அழகிய கோலமாய் மாறட்டும்!

செந்தூரத்தின் வாசக நெஞ்சங்களே, நீங்கள்தான் வரவேண்டும். "ஏழையின் சிரிப்பில்..." என்கிற தலைப்பில் இந்தப் படத்தைப் பார்க்கையில் உங்கள் உள்ளம் என்ன சொல்கிறது? அதை வார்த்தைகளாக வடியுங்கள்! கவிதையாக வருகிறதா இல்லையா என்பதல்ல முக்கியம். என்ன உணர்கிறோம்.. அதை எப்படி வார்த்தைகளில் கொண்டு வருகிறோம் என்பதுதானே முக்கியம்!

இது ஓர் வார்த்தைப்போர்! வாருங்கள், போராடலாம்

Hi nitha அமாவாசை அன்று எழுத ஆரம்பிச்சாச்சு.நான் நாள் கிழமை லம் பாக்க ல. போஸ்ட் போட்ட பின் தான் தோணுச்சு. மனசுல சில சமயங்களில் செம கோபம் வருது.என்ன பொறுத்த வரையில் பணம் மகிழ்ச்சியின் வரையறை இல்லை. அப்பா இந்த பணம் இருக்கவங்க அத தக்க வைக்க படும் paadu இருக்கே .எல்லாரையும் டென்ஷன் ஆக்கி shh appaaaa
 
ரோசி கஜன்

Administrator
Staff member
ஏழையின் சிரிப்பில்....

View attachment 266

உண்ண உணவில்லை
உடுக்க உடையுமில்லை
படுக்க இடமுமில்லை
காசுமில்லை காணிநிலமுமில்லை
கள்ளமில்லா ஏழையின் சிரிப்பினில்
நேசம் மட்டும் நிறைந்து கிடக்கிறது!

நல்ல முயற்சி நிதா . ஐந்து வருடங்களுக்கு முதல் இதேநாட்களில் தான் நானும் முதல் முதல் எழுத ஆரம்பித்தேன் . இப்படிப்பட்ட ஒரு சிறுகதை அறிவிப்பில்.

இங்கும் நிறைய புதிய படைப்பாளிகள் உருவாக்குவார்கள் என்று நம்புகிறேன் . செந்தூரத்தின் அங்கத்தினர் ஒவ்வொருவரும் கலந்து கொள்ளவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்!

('ஏழை' என்ற சொல்லைக் கேட்கையில் மனதுள் சினம் தான் வரும் நிதா. )
 
Last edited:

ரோசி கஜன்

Administrator
Staff member
நாங்கள் ஏழைகள்
View attachment 268
தண்ணீரில் புழுவொன்று வழியின்றி
தத்தளித்துத் துடிப்பதைப் போல்
கண்ணீரில் நாமின்று உணவின்றி
கவலையாய்த் தவித்திருந்து மிதக்கின்றோம்.

பசித்தாலும் உணவின்றி வாழ்விலே
பட்டினியை உட்கொண்டு வாழ்கிறோம்
புசித்தாலும் வறுமையன்றி எமக்கு
புதிதாக உணவின்றி சாகின்றோம்.

காலங்கள் மாறியே போனாலும்
காயங்கள் எம்மில் மாறாது
ஞாலத்தில் செல்வம் குவிந்தாலும்-எங்கள்
ஞாபகம் என்றுமே தீராது.

கந்தையை மட்டுமே உடையாக
கடைசி வரைக்கும் உடுக்கின்றோம்
எந்தையே ஈசனே என்செய
ஏதிலியாய் தினமும் அலைகின்றோம்.

அருமையான வார்த்தைத் தெரிவுகளோடு 'நச்' கவிதை வரிகள் . வாழ்த்துகள் மோகனன்.
 
ரோசி கஜன்

Administrator
Staff member
பணம் இருந்தும் சிலர்
எழை தான் இங்கே
கொடுக்கும் மனமும் இல்லை
சிரிக்கும் அறிவும் இல்லை
பெரும் பேறு பெற்றவர் தாம்
என்ற எண்ணம் வேறு
மற்றவரை மகிழ
நாம் மகிழ
வேண்டும்
எனத் தெரியாத யாரும் எழைகளே
அடுத்தவர் மகிழ்ச்சி கண்டால்
மகிழ தெரியாத யாரும் எழைகளே..
அதுதானே? பணமில்லாதவர் மட்டுமே ஏழைகள் கிடையாது . அது கொட்டிக் கிடந்தாலும் பரிதாபகரமாக ஏழ்மையில் குவிந்து கிடப்போர் அதிகம்.

உங்கள் கோபம் வார்த்தைகளில் தெரிகிறது Rena .

எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் தாம் . எழுத்துலகில் கவிதை மூலம் காலடி எடுத்து வைத்த எங்கள் செந்தூரத்தின் சிறு மலர் விரிந்து மனம் பரப்ப அன்பு வாழ்த்துக்கள் !
 
நன்றி ரோஸி அக்கா. நான் உங்கள் வானொலி பேட்டி கேட்டேன். மிகவும் நல்லா இருந்தது. என்னை விட வயதில் மூத்தவர் ஆகையால் அக்கா என்று அழைக்கிறேன்.
 
எல்லாம் இருந்தும்
இல்லாத ஆடம்பரத்திற்கு
ஏங்கும் நம் மனது எங்கே..?

எதுவும் இல்லாமல்
கிடைக்கும் ஒருபிடி
அத்தியாவசியத்தில்
களிக்கும் இவன் எங்கே...?

திருப்தியும் மகிழ்ச்சியும்
நம்மைப் பொறுத்தே...!
 
Top Bottom