ஏழையின் சிரிப்பில்....

உண்ண உணவில்லை
உடுக்க உடையுமில்லை
படுக்க இடமுமில்லை
காசுமில்லை காணிநிலமுமில்லை
கள்ளமில்லா ஏழையின் சிரிப்பினில்
நேசம் மட்டும் நிறைந்து கிடக்கிறது!

உண்ண உணவில்லை
உடுக்க உடையுமில்லை
படுக்க இடமுமில்லை
காசுமில்லை காணிநிலமுமில்லை
கள்ளமில்லா ஏழையின் சிரிப்பினில்
நேசம் மட்டும் நிறைந்து கிடக்கிறது!
இது உங்கள் பக்கம்! வாசகராகிய உங்களுக்கே உரித்தான பக்கம்! கதைகளை படிப்பதும் கருத்துக்களை சொல்வதுமாக மட்டுமே பொழுதை ஏன் கழிப்பான்? என்றோ ஓர் கவிதை அல்லது கதை வாசித்துக்கொண்டு போகையில் இது இப்படி இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று உங்கள் உள்ளம் சொல்லியிருக்கும்! என்னடா இதை இப்படி எழுதி இருக்கிறார்களே என்று மனம் முரண்டியிருக்கும். அந்தச் சிந்தனையை வெளிக்கொணரும் அழகிய முயற்சிதான் இது!
எழுத்தாளன் எழுத்தாளனாகவே வெளிவந்ததில்லை. வாசகனாய் ஆரம்பித்து, கருத்தாளனாய் மாறி, கற்பனையாளனாய் சிந்தித்தே எழுத்தாளனாய் முதல் அடியை எடுத்து வைக்கிறான்!
நீங்களும் வாருங்கள்! முதல் காலடிதான் சற்றே சிரமமானது! வைத்துவிட்டீர்களோ விறுவிறு என்று நடைபோடத் தொடங்கிவிடுவீர்கள்!
வாருங்கள்; கவிதை எழுதிப் பழகுவோம்! மேலே நானும் ஏதோ கிறுக்கி இருக்கிறேன். நீங்களும் கிறுக்குங்கள்! அத்தனை கிறுக்கல்களும் அழகிய கோலமாய் மாறட்டும்!
செந்தூரத்தின் வாசக நெஞ்சங்களே, நீங்கள்தான் வரவேண்டும். "ஏழையின் சிரிப்பில்..." என்கிற தலைப்பில் இந்தப் படத்தைப் பார்க்கையில் உங்கள் உள்ளம் என்ன சொல்கிறது? அதை வார்த்தைகளாக வடியுங்கள்! கவிதையாக வருகிறதா இல்லையா என்பதல்ல முக்கியம். என்ன உணர்கிறோம்.. அதை எப்படி வார்த்தைகளில் கொண்டு வருகிறோம் என்பதுதானே முக்கியம்!
இது ஓர் வார்த்தைப்போர்! வாருங்கள், போராடலாம்
Last edited: