• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 43 இறுதி அத்தியாயம்

Jnp1212-Fan

New member
அத்தியாயம் 43 - 1

அத்தியாயம் 43 - 2

அத்தியாயம் 43 - 3

ஒரு வழியாகக் கதையை முடிச்சிட்டேன்.
எப்பிடி இருக்கு என்று சொல்லுங்கோ. எப்போதும்போல் இல்லாமல் கொஞ்சம் இலகுவான கதையாக இருக்கட்டும் என்றுதான் இதை எழுதினேன்.


குறை நிறைகள் நிறைந்த மனதுடன் வரவேற்கப்படுகின்றன. எந்தத் தயக்கமும் இல்லாது சொல்லுங்க.

இதுவரை காலமும் முகப்புத்தகத்திலாகட்டும் தளத்திலாகட்டும் தொடர்ந்து கருத்திட்டு, லைக் பண்ணி, என்னை உற்சாகப்படுத்தி வழிநடத்தும் வாசக உறவுகள் அனைவருக்கும் மிகுந்த நன்றி.

முக்கியமாக வீடியோக்கள் போட்டு, பொருத்தமான பாட்டுகள் என்று ஒரு கொண்டாட்ட மனநிலையிலேயே என்னை எழுத வைத்த அத்தனை உறவுகளுக்கும் இன்னொருமுறை என் பிரத்தியேகமான நன்றிகள்.

உங்கள் கேலி, கிண்டல், செல்லச் சண்டைகள், பொய்க் கோபங்கள் அத்தனையையும் ஒரு செல்லக்குழந்தையின் மனநிலையோடு மிகவுமே ரசிப்பேன். அதற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

வேறு என்ன? போட்டி உண்டு என்று சொன்னேனே.

திறந்த புத்தகத்திலிருந்து கேட்கப்படும் கேள்விகள் இவை. சரியாக 24 மணித்தியாலங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதாவது நாளை இதே நேரத்தில் இந்தப் போட்டி முற்றுப்பெற்றுவிடும்.

இதன் காரணம் ஏற்கனவே சொன்னது போன்று ஆரம்பத்திலிருந்து என்னோடு பயணித்தவர்களுக்கு இந்தப் பரிசு சென்று சேர வேண்டும் என்பது மட்டுமே.





மேலே இருக்கிற இந்த கூகிள் போர்மை கிளிக் பண்ணினால் மூன்று கேள்விகள் இருக்கும். அதற்கான பதில்களைக் கேள்விகளின் கீழேயே எழுதுங்கள்.

நான்காவதாக நிதனிபிரபு நாவல்கள் தளத்தில் நீங்கள் என்ன ஐடியில் இருக்கிறீர்களோ அதை எழுதுங்கள். கடைசியாக send பட்டனை கிளிக் பண்ணினால் உங்கள் பதில்கள் எனக்கு வந்து சேர்ந்துவிடும்.

அவ்வளவுதான்.


வேறு என்ன மக்களே? அடுத்த வருடப் புத்தகத் திருவிழாவிற்கு நேரடிப் புத்தகமாகப் போடுவதற்கு ஒரு கதை எழுத வேண்டும். அதனால் இப்போதைக்கு அடுத்த கதை வராது. ஆனால், அதற்குப் பதிலாக ஆதார சுதி நாவலை ரீரன் செய்கிறேன் சரியா?

புத்தகத் திருவிழாவிற்கான கதை முடிந்ததும் ஆட்டநாயகன் ஆடப்போகும் ஆட்டத்தைப் பார்க்கலாம்.

நட்புடன் நிதனிபிரபு
Thank you for an amazing story. You rock as always.
 
Top Bottom