வாவ்... செம்ம 
 
 
 
எப்படி ஒரு முரட்டு மனிதனின் மனதினுக்குள் காதல் நுழைந்து அவன் மனதை மென்மையாகிற்று என்று அருமையாக சொல்லியிருக்கீங்க. முற்றிலுமாக அனைவராலும் வெறுத்து நாடு கடத்தப்பட்டவன் மனமில்லாமல் திரும்பி வந்து எப்படி அனைவருக்குள்ளும் அழகாக இடம் பிடித்தான் என்று காட்டியிருக்கீங்க நிதாமா. இது உங்களின் தனி பாணி. 
ஆனால் எனக்குள்ள ஒரு சின்ன குறை. அண்ணனும், தம்பியும் வலுக்கட்டாயமாக இணையை காதலிக்க வைத்து மகிழ்வாக இருப்பதை காட்டிய நீங்கள், உண்மையாகவே 10 வருடம் காதலித்து மணந்த ரஜீவன் யாழினியை சிறப்பாக காட்டவில்லையோ. அவர்களின் சூழ்நிலையை காரணம் காட்டினாலும், நீங்கள் நினைத்திருந்தால், இன்னும் கொஞ்சம் ரஜீவனின் காதலை அதிகமாக  வெளிப்படுத்திருக்கலாம். 
தவறாக நினைக்காதீர்கள். என்னுடைய சிறு மனச்சினுங்கள் இது.