• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 33

Goms

Active member
ஆஹா அருமை நிலன்🥰🥰🥰. நாங்க எல்லாம் நிதாமா உன் பிள்ளையை உறுதி படச் சொல்லவில்லை என்று கேட்டுக் கொண்டிருந்தோம்🤩. இப்போ நீயே உறுதி படுத்திவிட்டாய். கில்லாடியா நீ 💖😍😂😂🤣🤣🤣

ஆனாலும் நிதாமா உங்கள் கதை எழுதும் பாணியேத் தனிதான்🥰. ஒன்று உணர்வுகளின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும், கண்கள் கலங்காமல் வாசித்து முடிக்க முடியாது🥺. இரண்டு நாயகன் - ஆரம்பத்தில் பிடிக்காத விதமாக காட்டி, பிறகு போகப்போக அவனின் விசிறியாக எங்களை மாற்றி விடுவீர்கள்😜😂😂.

இளவஞ்சியை நினைத்து எங்கள் மனமெல்லாம் பாரமாக இருக்கிறதுதான்🥺, ஆனாலும் நிலன் நிலையை பார்த்தும் எங்களுக்கே மனசுக்கு கஷ்டமா இருக்கு😔😔.

எவ்வளவு ஆசையாக பிள்ளை, இல்லையில்லை பிள்ளைகளுக்கு ஆர்டர் கொடுத்தான், இப்போ அதைக் கொண்டாடக்கூட முடியாமல்....😭😭😭😭😭, ஏதாவது செய்து அவனையும், எங்களையும் சந்தோஷப்படுத்துங்க .....😍💞💞😍
 

Ananthi.C

Well-known member
என்ன சொல்றதுன்னு தெரியல.....நிலன் மேல கோபம் இருந்தாலும் இப்போ பாக்க ரொம்ப பாவமா இருக்கு....

ஆனா வஞ்சி வேணாணுன்னு சொன்ன உடனே சரின்னு எப்படி சொல்லலாம்... எப்பவும் போல அவளை சமாதானப் படுத்தவேண்டாமா.... அதை விட்டுட்டு எப்படி வஞ்சிகிட்ட அப்படி சொல்லலாம்.... ஆனால் பிள்ளை மட்டும் பொதுவாமா ....

விஷயம் தெரியுமா இல்லை அனுமானமா எதுவாயிருந்தாலும் அதற்க்காகவேயாவது அவளுக்கு கொஞ்சம் டைம் தந்து சமாதானபடுத்தியிருக்கலாம்...விலகிடனும் என்ற முடிவுக்கு உடனே சம்மதித்த நிலன எனக்கு பிடிக்கல ....

போடா நீயும் அந்த குடும்பத்து வாரிசு தானே.... அப்படித்தான் இருப்ப....அவ வேணும்ன்னு நிலையா நின்னது நீ அப்போ என்ன நடந்தாலும் அவள விட்டுக்கொடுக்காம இருந்துருக்க வேண்டியது நீ...இப்போ அவகிட்ட முடிவ கொடுத்து நல்லவனாக பாக்குறியோ....
உன் இடத்துல அவ இருந்தா என்ன செய்திருப்பான்னு கேட்டியே...அவ இடத்துல நீ இருந்தா போனா போகட்டும்ன்னு விட்டுருப்பியா.... அவரவர் நியாயம் அவரவர்க்கு பெரிது.... ஆனாலும் அவளை விட்டுகொடுத்து விட்டு அதற்கான எதிர்வினையை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாதா உன்னால்....
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

நிலன் என்னடான்னா, ரெண்டு பேருக்கும் முடிச்சை போட்டவன் நான், அதுனால ரெண்டு பேரையும் பிரிக்கிற பொறுப்பை உனக்கு தாரேன்னு சொல்றான், போட்ட நாலு ஆர்டர்ல ஒண்ணு தான் கன்ஃபார்ம் ஆயிருக்கு, இன்னும் ரிலீஸ் கூட ஆகலை..☹☹ அப்ப மிச்சம் மூணுக்கு நாங்க எங்க போக? 🤔🤔 ரெண்டு பேரும் சேர்ந்து..😏😏

FB_IMG_1722529358605.jpg
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom