• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 11

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... இதெல்லாம் நடக்கும்னு வஞ்சிக்கு தெரிஞ்சு தான் இருக்கும். வஞ்சிக்கு வேற ஐடியா எதுவும் இருக்கா?...
 

Goms

Active member
இது வஞ்சி எதிர்பார்த்ததுதானே? வீட்டில் யாரும் பொறுப்பெடுக்க வந்தால் தொழிலை விட்டுக்கொடுக்க ரெடியாத்தானே இருந்தா? சக்திவேலிடம் இருந்து இப்படி வார்த்தை வரும் என்று கணித்திருப்பாள். 😔

ஆனால் கண்டிப்பாக கணவனுக்கு தொழிலில் உதவிக்குத் துணை இருந்தாலும் அதன் முன்னேற்றத்துக்கு தையல்நாயகியை எப்படி எதிர்ப்பாள்? 😔

சக்திவேல் பெரிய மனிதராகத் தெரியவில்லை. ஏதோ பழி வாங்கும் படலம் போல் உள்ளது. 😡

சுயம்புவாக சிறகடிப்பவளின் சிறகையெல்லாம் வெட்டியெடுத்த பின்னும் சித்திரவதையை தொடரலாமா? 😭

நிலன் நிலைமை உன் கையில், என்ன செய்யப்போகிறாய்?🤔

வஞ்சியின் திருமணம் பற்றிய கேள்விக்கு விடை சொல்லாத வரை உங்களுக்கு லீவு கிடையாது......🤣 சீக்கிரம் சொல்லிட்டு லீவு எடுத்துக்கோங்க நிதாமா 😄😛
 

aashabanu

Member
அவ கேக்குற ஒரு கேள்விக்கு மகா பிரபுவுக்கு பதில் சொல்ல முடியாது இவ மட்டும் மனசுல இருக்குற உணர்வுகளை எல்லாத்தையும் அப்படியே அவன் கிட்ட கொட்டிடனும் அப்பா அம்மாவ மன்னிச்சு ஏத்துக்கணும் வளர்த்தவர்களுக்கு உண்மை தெரிஞ்ச கட்டிக்கிட்ட இந்த மகானுக்கும் நன்றியா இருக்கணும் இல்ல ஏனென்றால் அவளுக்கு மனசே கிடையாது
சக்திவேல் ஐயா எப்படி சின்ன பேரன் சின்ன பேத்தி பெரிய பேரன் அவனோட மனிசி ரொம்ப நல்லா இருக்கு உங்களுடைய நியாயம் வஞ்சிக்கு சக்திவேல் குடும்பத்தோட மருமக நிலன் பொண்டாட்டி அந்த அடையாளமாதான் இருக்கணும் அப்படித்தானே
அப்படியே சின்ன பேரனும் சின்ன பேத்தியும் தையல்நாயகி தொழில் ஒன்னும் இல்லாம ஆகணும் உங்களோட தொழில் மட்டும் வஞ்சியோட சப்போட்டில் நல்லா போகணும் நீங்க எல்லாம்ஒரு பெரிய மனுஷன்
 

indu4

Member
“பதில் சொல்லிப்போட்டுப் போ வஞ்சி!” திருமணம் நடந்த நாள் முதலாய் அவள் மனநிலை அறிந்து, அவளுக்கு இதமாகத்தான் நடக்கிறான். அப்படி இருந்தும் அவள் காட்டும் இந்த அலட்சியம் அவனையும் இலேசாகக் கோபம் கொள்ள வைத்ததில் அழுத்தியே சொன்னான்.

அதற்கு அவள் அடங்க வேண்டுமே. “இந்தக் கலியாணம் ஏன் நடந்தது நிலன்?” என்றாள் அவனை நேராக நோக்கி.

படக்கென்று வாயை மூடிக்கொண்டான் நிலன்.

“என்னட்ட இருக்கிறது ஒரேயொரு கேள்வி. அதுக்குப் பதில் சொல்லாம இந்தக் கேள்வியும் கேட்டுக்கொண்டு வராதீங்க. பதில் கிடைக்காது!” என்றுவிட்டு அவள் இரண்டடிதான் எடுத்து வைத்திருப்பாள்.

“அக்கா!” என்று கதவைத் தட்டி அழைத்தபடி வந்தான் சுதாகர்.

கணவன் மனைவி இருவரும் திரும்பிப் பார்த்தனர்.

“அத்தானின்ர அப்பாவும் அப்பப்பாவும் வந்திருக்கினம். உங்களக் கீழ வரட்டாம் எண்டு அப்பா சொல்லிவிடச் சொன்னவர்.” என்று தகவல் சொன்னான்.

ஏனோ? கணவன் மனைவி இருவர் பார்வையும் ஒரு நொடி சந்தித்து மீள இருவரும் கீழே இறங்கி வந்தனர்.

“என்ன அப்பப்பா, இஞ்ச வாறதாச் சொல்லவே இல்ல.” என்றவனின் விழிகள் தந்தையைக் கேள்வியுடன் ஏறிட்டன.

“திடீரெண்டு அப்பா வெளிக்கிடச் சொன்னார். அதான் கூட்டிக்கொண்டு வந்தனான்.” என்றார் அவர்.

அப்படி என்ன திடீர் அலுவல்? அவன் புருவங்களைச் சுருக்க, “அதுக்கு என்ன தம்பி. இனி இதுவும் உங்கட வீடுதானே? இஞ்ச வாறதுக்குச் சொல்லிப்போட்டா வரோணும்?” என்றார் குணாளன்.

நிலனை ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தன்னருகில் வந்து அமர்ந்த மிதுனிடம், “பிறகு சின்ன பேரா? இஞ்சயே இருக்கிற பிளான்ல இருக்கிறியா, இல்ல அங்க வரப்போறியா?” என்று விசாரித்தார் சக்திவேலர்.

“கொஞ்ச நாளைக்கு இஞ்சயே இருக்கப்போறன் அப்பப்பா.” என்றான் அவன்.

அவன் சொன்னதற்கு மறுத்து அவர்களை அழைத்துக்கொண்டு போய்விடுவாரோ என்கிற பயத்தில், “பிள்ளை பிறக்கிற வரைக்கும் இஞ்சயே இருக்கட்டும். அதுக்குப் பிறகு அவேக்கு எது வசதியோ அப்பிடிச் செய்யட்டும்.” என்று வேகமாக இடையிட்டுச் சொன்னார் ஜெயந்தி.

மிதுனின் எண்ணமும் அதுதான். என்ன, இன்னுமே குழந்தையைப் பற்றி இயல்பாக எல்லோரிடமும் பேச அவனால் முடியவில்லை. திருமணத்திற்கு முதல் உருவான குழந்தை என்கிற உறுத்தல் அவனையும் உறுத்திக்கொண்டே இருந்தது.

அதற்கு ஒன்றும் சொல்லாத சக்திவேலர், “குணாளன், ஒரு முக்கியமான விசயம் கதைக்கோணும். எல்லாரும் இஞ்ச இருக்கேக்கையே கதைச்சிட்டா நல்லம் எண்டுபோட்டுத்தான் வெளிக்கிட்டு வந்தனான்.” என்று குணாளனைப் பார்த்தார்.

“சொல்லுங்க ஐயா. என்ன எண்டாலும் கதைச்சுப் பேசிக் செய்றதுதானே.” என்ன வரப்போகிறது என்று மெல்லிய கலக்கம் உண்டானாலும் சொன்னார் குணாளன்.

“ஒரு உறைக்க ரெண்டு கத்தி இருக்கிறது சரியா வராது குணாளன். அதோட தையல்நாயகியும் சக்திவேலும் இனியும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறதில எனக்கு விருப்பம் இல்ல. அதால என்ர பெரிய பேரனுக்கு உதவியா அவன்ர மனுசி இருக்கட்டும். சின்ன பேரனும் பேத்தியும் சேர்ந்து தையல்நாயகியப் பாக்கட்டும்.” என்றதும் அங்கிருந்தவர்களில் யார் அதிகமாக அதிர்ந்தார்கள் என்று கணிக்க முடியாத அளவில் அத்தனை பேருக்கும் பேரதிர்ச்சிதான்.

அத்தனை தலைகளும் உடனேயே இளவஞ்சியை நோக்கித் திரும்பின. அவள் ஆடவும் இல்லை, அசையவும் இல்லை. அப்படியே நின்றிருந்தாள்.

ஆனால், நிலனால் அப்படி நிற்க முடியவில்லை. “என்ன கதைக்கிறீங்க அப்பப்பா? அது அவளின்ர தொழில். அவள் அப்பிடியெல்லாம் விட்டுக்குடுக்க மாட்டாள். வேணுமெண்டா சக்திவேலை மிதுன் பாக்கட்டும்.” என்றான் ஆத்திரத்தை அடக்கி.

குணாளன் நிலைகுலைந்தே போனார். ஆனாலும் சமாளித்து, “ஐயா குறையா நினைக்காதீங்கோ. அது அம்மா மூத்த மகளுக்குத்தான் குடுத்தவா. அத சொந்தம் கொண்டாட எனக்கே உரிமை இல்லை.” என்று நயமாகவே சொன்னார்.

“அவாவே உங்கட சொந்த மகள் இல்ல. இதுல உங்கட அம்மா உருவாக்கின தொழில் எப்பிடி அவாக்குச் சொந்தமாகும்?” என்று சக்திவேலர் சொன்னதும் நிலனே துடித்துப்போனான் என்கையில் இளவஞ்சியின் நிலை?

வேகமாகத் திரும்பி அவளைப் பார்த்தான். உள்ளத்து உணர்வுகளை அப்படியே அடக்கியத்தில் இரத்தமெனச் சிவந்துவிட்ட முகத்துடன் நின்றிருந்தாள் அவள்.

ஆரம்பத்திலிருந்து அவள் அவனை மணக்கமாட்டேன் என்று நின்றதே திருமணத்தின் பின் இப்படி நடக்கும் என்றுதான். தொழிலையும் வாழ்க்கையும் சேர்த்து யோசிக்காதே, அப்படி ஒன்று நடக்கவே நடக்காது என்று எத்தனை முறை சொல்லியிருப்பான்?

ஆனால் இப்போது? அவள் சொன்னபடிதான் அனைத்தும் நடக்கிறது.

அத்தனை பேரின் முன்னும் வீட்டின் மூத்த மனிதரிடம் கோபப்பட முடியாமல், “என்னப்பா இதெல்லாம்? இதுக்குத்தான் இவரை இஞ்ச கூட்டிக்கொண்டு வந்தீங்களா?” என்று பிரபாகரனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சினந்தான்.

பிரபாகரனாலும் எல்லோர் முன்னும் தந்தையை எதிர்த்துப் பேச முடியவில்லை. ஆனாலும், “அப்பா, இத நாங்க பிறகு கதைப்பமே.” என்று அவரைத் தடுக்கப் பார்த்தார்.

“பிறகு கதைக்க என்ன கிடக்கு? அதுதான் கதைச்சாச்சே.” என்று மகனிடம் சொல்லிவிட்டு, “குணாளன் இஞ்ச பாருங்கோ. அவாவை நல்ல முறைல வளத்து, தொழில் பழக்கி, ஊருக்க மதிப்பும் மரியாதையோடயும்தான் வச்சிருக்கிறீங்க. இனியும் என்ர வீட்டு மருமகளா, என்ர பேரன்ர மனுசியா மதிப்புக் குறையாமத்தான் இருக்கப் போறா. அதால உண்மையான வாரிசு ஆரோ, அவேக்குத்தான் தொழில் போகோணும்.” என்றவரை வேகமாக இடை மாறித்தான் நிலன்.

“நீங்க என்ன சொன்னாலும் இது நடக்காது அப்பப்பா. அவள் இந்த வீட்டு வாரிசு இல்லாம இருக்கலாம். ஆனா, அந்தத் தொழில் வாரிசு அவள் மட்டும்தான். அத வேற ஆறுக்கும் குடுக்க நான்…” என்றவனின் கரத்தைப் பற்றித் தடுத்த இளவஞ்சி, “நான் தொழில்ல இருந்து விலகிறன்.” என்று அறிவித்தாள்.

தொடரும்…

கேட்ட லீவு பெண்டிங்ல இருக்கு. எப்ப வேணுமோ அப்ப சொல்லிப்போட்டு எடுப்பேன் சொல்லிட்டேன்.
Super good Vanji....Nilan also ❤....Sakthivelar😡😡👊 what's his problem....hahaha Nitha sis still your leave appln. is in pending....sollitan.... Saturday and Sunday approved
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

இந்த கலியாணம் ஏன் நடந்தது நிலன்? இந்த கேள்வி கேட்க வேண்டியது நிலன்கிட்ட இல்லை, ரைட்டர் நிதாகிட்ட.. 😁😁 லீவு எடுக்கிறதுக்கு முன்னாடி இந்த கேள்விக்கு பதில் சொல்லிட்டு போங்க..😒😒
FB_IMG_1757399413295.jpg
 
Top Bottom