• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

விடுகதைகள்

நிதனிபிரபு

Administrator
Staff member
7. வெங்காயம்
8. தீக்குச்சி
9.தராசு
10.கடிகாரம்
6.படகு வீடு.
ஹேஹே ஈஸியா கேட்டுடமோ? படக்கென்று கண்டு பிடிச்சிட்டிங்க ரெண்டுபேரும். கெட்டிக்காரர். படகு வீடு அல்லது கப்பல்கள் அதுவும் பொருந்தும். வேற தேடி எடுத்துக்கொண்டு வாறன்
 

Sowdharani

Well-known member
சும்மா நெட்டை தட்டியபோது கண்ணில் பட்டத்தை இங்க போடுறேன். தெரிஞ்ச ஆக்கள் சொல்லுங்கோ பாப்பம். அப்படியே, நீங்களும் உங்களுக்குத் தெரிந்த விடுகதையை கேட்கலாம்.

1. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?

2. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?

3. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான், அவன் யார்?

4. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?

5. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
3 வெங்காயம்
4 கரும்பு
5 குரங்கு
 

Sowdharani

Well-known member
6. தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் அது என்ன?

7. நான் வெட்டுப்பட்டால் வெட்டியவனை அழ வைப்பேன் நான் யார்?

8. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை அது என்ன?

9. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம் அது என்ன?

10. இதயம் போல் துடித்திருக்கும் இரவு பகல் விழித்திருக்கும் அது என்ன?

கண்டு பிடிங்க கண்டு பிடிங்க...
6படகு வீடு
7 வெங்காயம்
9 தராசு
10கடிகாரம்
 

நிதனிபிரபு

Administrator
Staff member
கண்டு பிடிங்க பாக்கலாம்.

1. கடுமையான மழை நேரத்தில் ஒருவர் குடை பிடிக்காமல் பாதையில் நடந்துச் சென்றார். ஆனாலும், அவரின் ஒரு தலைமயிர் கூட நனையவில்லை. எப்படி?

2. ஒரு விமானம் பாக்கிஸ்தான் இந்தியா எல்லையில் விபத்துக்குள்ளானது. விபத்தில் தப்பியவர்களை எந்த நாட்டில் அடக்கம் செய்ய வேண்டும்?

3. ஒரு சுட்டிப் பையன் சுறுசுறுப்பாக விளையாடிக்கொண்டிருந்தான். அவனிடம் நான் உன் வயது என்ன தம்பி என்று கேட்டேன். அந்தப் புத்திசாலிக் குட்டிப் பையன் புதிராகப் பதில் அளித்தான்.

"இரண்டு நாட்களுக்கு முன் என் வயது 10. அடுத்த வருடத்தினுள் நான் 13வது வயதை எட்டிவிடுவேன். உங்களால முடிந்தால் என் வயதையும் பிறந்த நாளையும் கூறுங்கள்." என்றான்.

முடிந்தால் நீங்கள் கண்டுபிடித்துக் கூறுங்கள் பார்க்கலாம்.
 
Last edited:
Top Bottom